கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் ஜெஜெ கார்டனில் உள்ள ஒரு மாடி வீட்டில் வசிப்பவர் ரகுபதி. இவரது மனைவி லதா. நேற்று (24-03-18) மாலையில் வீட்டில் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் அத்து மீறி நுழைந்த 2 இளைஞர்கள் லதாவை தாக்கி சத்தம் போடாமல் இருக்கும் படி கூறியதோடு, அவரிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலியுடன் இணைந்த தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பினர்.
சாதூர்த்தியமாக செயல்பட்ட லதா திருடன் தாலி கொடியை பறித்துக் கொண்டு ஓடுவதாக சத்தம் போட்டுள்ளார். நிலைமையை உணர்ந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞர்களை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பசுபதிபாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் இரு இளைஞர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திருட்டு சம்பவமும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காட்சிகள் தற்போது வாட்ஸ் அப்பில் தீவிரமாக பரவி வருகின்றதையடுத்து, காவல்துறை தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.