தமிழகத்தில் ஒரு பக்கம் வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், அந்த மாவட்டங்கள் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றாலும், இன்னொரு பக்கம் மற்ற மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும், குறிப்பாக மதிய நேரத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வங்கக் கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தில் பரவலாக இன்னும் ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.