வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

Siva

திங்கள், 7 ஏப்ரல் 2025 (07:19 IST)
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வீட்டுக்கு மர்மக் கும்பல் தீ வைத்த சம்பவம் மணிப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வக்பு வாரிய திருத்த சட்டம் சமீபத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதியும் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில், வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேசிய அஷ்கர் அலி என்பவர் வீட்டிற்கு மர்மக் கும்பல் தீ வைத்ததாகவும், இதனால் அவரது வீடு உள்ள மணிப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அவர் வக்பு சட்டத்தை ஆதரித்து தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பும் தெரிவித்திருந்தார். ஆனால், மர்மக் கும்பல் இந்த தீவைத்து சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மணிப்பூரில் உள்ள லிலோங் என்ற பகுதியில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசிப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்