எடப்பாடி பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னையில் இன்று நடக்கிறது

வெள்ளி, 23 மார்ச் 2018 (07:20 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னையில் இன்று நடக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழகத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சரானார். பின்னர் கட்சியில் நடந்த உட்பூசலுக்குப் பின்  கடந்த வருடம் பிப்ரவரி 16 ந் தேதி எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 
 
இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவி ஏற்று 2018 பிப்ரவரி 16-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. எடப்பாடி பழனிசாமி  அரசு பதவியேற்ற ஓராண்டு காலத்தில் பலகோடி ரூபாய் பதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் சாதனை படைத்துள்ளது.
 
இந்நிலையில் அரசு சார்பில் அதிமுக வின் ஓராண்டு சாதனை விழா இன்று  மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இவ்விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்க, எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்