டாஸ்மாக்கை கதவை அடித்து உடைத்து உள்ளே நுழைய முயன்ற இளைஞர் – இன்னும் 20 நாள்ல என்னெல்லாம் நடக்கப்போகுதோ?

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (16:18 IST)
ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் குடிகாரர்கள் டாஸ்மாக் முன்னர் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒருநாள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் இன்று தமிழகத்தில் ஏதோ ஒரு பகுதியில் டாஸ்மாக் முன்னர் மக்கள் கூட்டமாகக் கூடியுள்ளனர். அங்கு வந்த போலிஸ்காரர் கலைந்து போக சொல்லியும் கூட்டம் அசையவில்லை. அதிலும் ஒரு இளைஞர் கல்லை எடுத்து டாஸ்மாக் ஷட்டரை அடித்து உடைக்க முயற்சிக்கிறார். அதைப் பலரும் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரப்ப அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்