அதை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கமும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் அருகே செயல்படும் பார்கள் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட்டு வரும் நிலையில் நாளை டாஸ்மாக்குகளை முழுவதுமாக மூடுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாளை கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இன்று காலை மதுக்கடைகள் திறக்கும் முன்னரே மதுவிரும்பிகள் டாஸ்மாக் முன்னர் குவிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் நாளை டாஸ்மாக் செயல்படாது என்பதால் மதுவை கள்ள மார்க்கெட்டில் விற்க முயன்றால் அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.