நான்கே நாளில் ரூ.626 கோடிக்கு மதுவிற்பனை: இது டாஸ்மாக் அதிர்ச்சி

வியாழன், 26 மார்ச் 2020 (13:46 IST)
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறப்பித்துள்ளார் என்பதும் இன்று இரண்டாவது நாளாக அந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விரைவில் அதிக நாட்கள் ஊரடங்கு உத்தரவு வரும் என்பதை முன்கூட்டியே கணித்த குடிமகன்கள் கடந்த 21ஆம் தேதி முதலே தங்கள் தேவைக்கு மது பாட்டில்களை அதிகளவில் வாங்கி ஸ்டாக் வைக்க தொடங்கியதாக தெரிகிறது.
 
இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த 21ஆம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான நான்கு நாட்களில் 626 கோடி ரூபாக்கு க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக டாஸ்மார்க் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அளவிலான மது பாட்டில்களை வாங்கி தங்கள் வீட்டில் சாக்கு வைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
எந்த வேலையும் இன்றி வீட்டிலேயே இருப்பதால் மதுவகை தேவையான அளவு அதிகம் உள்ளவர்கள் வாங்கி வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்