சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக செய்திகள் வெளியானது.இதுவரை 114 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 5,200 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்த நோயின் தாக்கத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது, தமிழக அரசு, திரையரங்குகள் வணிகவளாகங்கள், அனைத்தையும் வர்யும் 31 ஆம் தேதிவரை மூட உத்தரவிட்டுள்ளது.
இதில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரியில் தொடர்ந்து இயங்கும் எனவும் திட்டமிட்டபடி 10 ஆம் , மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் நடக்கும் எனவும் அத்தியாவசிய பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கூட்டங்கள், விளையாட்டுகள், தேவாலயம், மசூதிகள், கோவில்களில் , மாநாடுகள், சுற்றுலா ரிசார்டுகள், ஒன்றுகூடும் இடங்கள், நீச்சம் குளம், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், கருத்தரங்குகள், , ஏற்கனவே திட்டமிட்ட திருமண நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்தக்கூடது. உடற்பயிற்சி கூடங்கள் , அரசியல் கூட்டங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
மேலும், டாஸ்மாக், தனியார் பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் வ்சரும் 31 ஆம் தேதிவரை மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.