ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாத நாம் தமிழர் கட்சி!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:30 IST)
தமிழக தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை திமுக முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 110 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி முன்னணி பெறவில்லை. இத்தனைக்கும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்களைக் களமிறக்கியது. வேட்பாளர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளித்தது போன்ற செயல்களால் இணையத்தில் பரவலாக கவனம் பெற்றது. ஆனால் மக்கள் நீதிமய்யம், பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் கூட ஒரு சில தொகுதிகளில் முன்னிலைப் பெற்ற நிலையில் நாம் தமிழர் இன்னும் ஒரு தொகுதியில் கூட முன்னிலைப் பெறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்