தேர்தல் வெற்றியை கொண்டாட தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு

செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (10:49 IST)
இந்தியாவில் 5 மாநில தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் போது அரசியல் கட்சியினர் அதை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றும், தேர்தல் ஆணையமே இதற்கு பொறுப்பு என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மே 2ம் தேதி 5 மாநில தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வழக்கமாக முடிவுகள் வெளியாகும்போது சம்பந்தபட்ட கட்சி தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் கூடி பட்டாசு வெடிப்பது, இனிப்பு வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இந்த முறை தேர்தல் வெற்றியை கொண்டாட 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்