தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? – வாக்கு எண்ணிக்கை Live Updates
ஞாயிறு, 2 மே 2021 (08:29 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் கள நிலவரம் உடனுக்குடன் Live Update….
திமுக - 153 , அதிமுக - 80, அமமுக - 0, மநீம - 1, நாதக - 0 இடங்களில் முன்னிலை
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 16வது சுற்றில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனை விட 5170 வாக்குகள் அதிகம் பெற்று விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன் முன்னிலை
போடி தொகுதியில் 9வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் 3720 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
பவானிசாகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அண்ணா நகர் தொகுதி 12 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் மோகன் 9,379 வாக்குகள் முன்னிலை
கொளத்தூர் தொகுதி 11 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 23,176 வாக்குகள் முன்னிலை
விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து!
திருக்கோவிலூர் தொகுதி 16வது சுற்றில் பாஜக வேட்பாளரைவிட திமுக வேட்பாளர் பொன்முடி 38,933 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது சிபிஎம்; கீழ்வேளூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவு - சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி
விராலிமலையில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தம்: மின்னணு இயந்திரத்தில் இருந்த எண்கள் முகவர்களிடம் உள்ள எண்களுடன் மாறுபட்டு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
விராலிமலை: முதல் சுற்றில் சுமார் ஒருமணிநேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 2-ஆவது சுற்றில் ஒன்றரை மணிநேரமாக பாதிப்பு
சென்னை துறைமுகம் தொகுதியில் 6வது சுற்று முடிவில் 3385 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சேகர் பாபு தொடர்ந்து முன்னிலை - பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் பின்னடைவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், வந்தவாசி ஆகிய இடங்களில் திமுகவும். போளூர், ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகளில் செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவில்லூரில் திமுகவும். மயிலத்தில் பாமகாவும், திண்டிவனம்(தனி) மற்றும் வானூர் (தனி), ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
கள்ளக்கிறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 4 தொகுதிகளில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் திமுகவும். கள்ளக்குறிச்சியில் (தனி) அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதிகளில் சங்ககிரி மற்றும் சேலம் (வடக்கு)-ல் திமுகவும். சேலம் (மேற்கு)-ல் பாமகாவும், கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (எஸ்டி), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சேலம் (தெற்கு), வீரபாண்டி ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகளில் சேந்தமங்கலம், நாமக்கலில் திமுகவும். திருச்செங்கோட்டில் கொமதேகவும், இராசிபுரம்(தனி), பரமத்தி-வேலுர், குமாரபாளையம் ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸும், ஈரோடு மேற்கு மற்றும் அந்தியூரில் திமுகவும். மொடக்கிறிச்சி, பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் 3-வது சுற்றில் பின்னடைவு. திமுக வேட்பாளர் ஜட்ரீம் ரா.மூர்த்தி முன்னிலை!
பாஜக மதியம் 12.30 மணி நிலவரப்படி சென்னை துறைமுகம், தாராபுரம் மற்றும் உதகை ஆகிய 3 இடங்களில் முன்னனியில் உள்ளனர்!
ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி 18,218 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
சென்னையில் உள்ள 16 தொகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக முன்னிலை
சென்னை துறைமுகம் தொகுதியில் 5வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சேகர் பாபு 1903 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை - பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்திற்கு தொடர்ந்து பின்னடைவு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 7 வது சுற்று முடிவில் 19,177 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி 40950 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் 2-வது சுற்றில் முன்னிலை
திருவள்ளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா முன்னிலை!
கொளத்தூர் தொகுதியில் 3 சுற்றுகளின் முடிவில் 5968 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவெரா முன்னிலை
மதுரை தெற்கில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் முன்னிலை
தூத்துக்குடி தொகுதியில் 3-வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் 4,887 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், திமுக 128 (திமுக 106, காங்கிரஸ் 8, மதிமுக 4, சிபிஎம் 3, சிபிஐ 2, விசிக 4, மற்றவை 1) இடங்களையும், அதிமுக 93 இடங்களையும் (அதிமுக 79, பாஜக 3, பாமக 11), மநீம 1 இடங்களையும் பெற்றுள்ளது.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் பின்னடைவில் இருந்த திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் முன்னிலை பெற்றார்
கோவை தெற்கு தொகுதியில் 3 வது சுற்று முடிவில் ம.நீ.ம வேட்பாளர் கமல்ஹாசன் முன்னிலை பெற்றார்
திருச்செந்தூர் தொகுதியில் 4வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளரை விட 5477 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை
சென்னை ஆயிரம்விளக்கில் பாஜக கட்சி வேட்பாளர் குஷ்பு சுந்தர் பின்னடைவு