காவி மயமாகும் கல்வி நிலையங்கள்! – ஸ்டாலின் அறிக்கை!

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (13:23 IST)
ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை ஐஐடியி முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபாத்திமாவின் சாவுக்கு ஐஐடி பேராசிரியர்களே காரணம் என மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ”மாணவி ஃபாத்திமா தனக்கு அளிக்கப்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தை நம்பி படிக்க அனுப்பி வைத்த அந்த தாயாரின் நம்பிக்கை உடைக்கப்பட்டுவிட்டதை இந்த சம்பவம் காட்டுகிறது. இது வேதனைக்குரியது மட்டுமல்லாமல் வெட்கி தலைகுனியக்கூடியது ஆகும்” என்று கூறியுள்ளார்.

மேலும் “கல்வி நிலையங்கள் காவி மயமாகும் போக்கு தவிர்க்கப்பட்டு, அனைவரையும் சமமாக நடத்தும் போக்கு ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஏற்பட ஆவண செய்ய வேண்டும். ஃபாத்திமா வழக்கில் ஆள்பவர்கள் நேர்மையான, சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்