இந்நிலையில் அதிமுகவின் கதர் மற்றும் கிராமத் தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் அதிமுக கூட்டணிக்கே பங்கம் விளிஅவிக்கும் விதமாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். ஆம், சிவகங்கையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார், அது என்ன ஆனது பார்த்தீர்களா? இனி நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அது செல்லுபடி ஆகாது என பேசினார்.
அதிமுக அமைச்சர், கூட்டணியின் இருக்கும் கட்சி தலைவர் குறித்து இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தேமுதிக தரப்பினரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. தேமுதிக தரப்பில் இது குறித்து கொதிப்புடன் அதிமுக தலைமையிடம் பேச்சு நடந்ததாம்.