அம்மா உணவகம் போல விரைவில் கலைஞர் உணவகம்! – அமைச்சர் தகவல்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (12:51 IST)
தமிழகத்தில் அம்மா உணவகங்கள் போல புதிதாக கலைஞர் உணவகங்கள் அமைக்க உள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 650 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் அம்மா உணவகம் போல மாநிலம் முழுவதும் கலைஞர் பெயரில் உணவகங்கள் தொடங்க உள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 500 உணவகங்கள் திறக்க திட்டமுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்