காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பில்லை? – வானிலை ஆய்வு மையம்

வியாழன், 25 நவம்பர் 2021 (11:42 IST)
வங்க கடலில் இன்று உருவாக உள்ளதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஏற்கனவே நேற்று உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரம் தாமதமாவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் எதிர்வரும் 29ம் தேதி அந்தமான் தீவுகள் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்