அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

Mahendran

சனி, 5 ஏப்ரல் 2025 (11:53 IST)
அண்ணா சிலை மீது பாஜக கொடியை மர்ம நபர்கள் போட்டுவிட்டு சென்ற சம்பவம் தஞ்சாவூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா சிலை உள்ள நிலையில், இந்த சிலைக்கு அவ்வப்போது மாலை அணிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென அண்ணா சிலை மீது திமுக மற்றும் பாஜக கொடிகளை இணைத்து சில மர்ம நபர்கள் போட்டுள்ளனர்.
 
காலையில் இதைப் பார்த்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக நிர்வாகிகளுக்கு தகவல் வழங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, அண்ணா சிலை மீது போடப்பட்டிருந்த திமுக மற்றும் பாஜக கொடிகளை அகற்றி பதற்றத்தை நீக்கியுள்ளனர்.
 
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பதைக் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்