நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டி; விஜய் மக்கள் இயக்கம் அதிரடி முடிவு!

வியாழன், 25 நவம்பர் 2021 (08:42 IST)
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்ட நிலையில் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்ட நிலையில் பல இடங்களில் கணிசமான வெற்றியை பெற்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஈரோடில் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவது என்றும், மாற்று கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்