தமிழகத்தில் மூன்றாவது கூட்டணிக்கு சான்ஸே இல்ல! – எல்.முருகன் சூசகம்!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (09:48 IST)
தமிழகத்தில் அதிமுக – திமுக அல்லாத மூன்றாவது கூட்டணிக்கான சூழல் உள்ளதாக கமல்ஹாசன் பேசியது குறித்து பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமல்ஹாசனும் இந்த முறை சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார்.

இதுகுறித்து பேசியிருந்த அவர் தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி உருவாகும் காலம் வந்துவிட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் “தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை” என கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை நடைபெறும் என்றும், மத்திய அரசின் சாதனைகளை தமிழகம் முழுவதும் பரப்புரை செய்வதே வேல் யாத்திரையின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்