இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva

ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (16:52 IST)
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
 
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த நிலையில், இன்று இரவு  தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையை பொருத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்