நிலநடுக்க இடிபாடிகளில் சிக்கி ...மூன்று நாள்களுக்குப் பின் சிறுமி மீட்பு!! வைரல் வீடியோ
செவ்வாய், 3 நவம்பர் 2020 (20:43 IST)
துருக்கியில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் மூன்று நாட்களுக்குப் பின் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் ( அக்டோபர்) 30 ஆம் தேதி துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் சுனாமியை நினைவுபடுத்துவதாக பலநாடுகள் கருத்து தெரிவித்தன அதேபோல் ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு சுனாமி அலைகளும் கடலைத் தாண்டின இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.இதுவரை நூறு பேர் உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதில்,இஸ்மிர் பகுதியில் அய்தா என்ற 3 வயதுச் சிறுமி பாதுகாப்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3 yaşındaki Ayda Gezginin enkaz altındaki görüntüleri ortaya çıktı….
Tunceli İl Afet ve Acil Durum Müdürü Cem Erdoğan, Aydayı rahatlatmak için oyun oynuyor pic.twitter.com/hzkcmzFBV8