பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

Siva

ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (14:58 IST)
பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்த இலங்கை அரசு, 14 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது.
 
பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அனுரா குமார திசாநாயக்கவை பிரதமர் மோடி சந்தித்து, மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
பிரதமர் மோடி இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்தவுடன் கிளம்பிய சில நிமிடங்களில், 14 தமிழக மீனவர்களை இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ததாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று அல்லது நாளை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதுமட்டும் இல்லாமல், தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளும் விரைவில் ஒப்படைக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்