உலக சிக்கன நாள்- மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய கரூர் கலெக்டர் (வீடியோ)

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (13:27 IST)
கரூரில் உலக  சிக்கன  நாளை  முன்னிட்டு  பள்ளி  மாணவ  மாணவிகளுக்கு இடையே  நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பரிசு வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்  30-ம் தேதி உலக சிக்கன நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  மாணவ,  மாணவிகளிடையே சிக்கனம் மற்றும் சிறுசேமிப்பு பண்பினை வளர்த்தால் அவை அனைவருக்கும் சென்றடையும் என்ற நோக்கத்தில் மாணவ,  மாணவியர்களுக்காக  நடனப்போட்டி,  நாடகப்போட்டி,  கட்டுரைப் போட்டி  மற்றும்  பேச்சுப் போட்டி  நடத்தப் பட்டு  அதில்  வெற்றி பெற்ற  மாணவ,  மாணவியர்களை  பாராட்டி  மாவட்ட  ஆட்சித் தலைவர் அன்பழகன்  பரிசுகளை வழங்கினார். 
 
மேலும், சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். சிறுகச்சிறுக சேர்க்கும் பழக்கத்தை மாணவப்பருவத்திலேயே நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். காசு பணத்தை மட்டுமல்ல,  நல்ல எண்ணங்களை,  சிந்தனைகளை,  தன்னம்பிக்கையை,  பிறருக்கு உதவும் மனப்பாங்கை  மனித நேயத்தையும்  உங்கள்  மனதில்  சிறுகச் சிறுக  சேர்த்து  வைத்துக் கொள்ள வேண்டும்.  
 
சிறு  சேமிப்பு  பழக்கம்  என்பது  தேவையில்லாத  தீய  பழக்க வழக்கங்களை  நம்மிடமிருந்து  புறந்தள்ளக்கூடிய  ஒரு  சிறந்த வழி முறையாகும். எனவே,  மாணவ-மாணிவகளாகிய  நீங்கள்  அனைவரும் சிறுசேமிப்பு  பழக்கத்தை  தொடர்ந்து  கடைபிடிப்பதோடு  உங்கள்  உற்றார் உறவினர்  நண்பர்களுக்கும்  கற்றுக் கொடுங்கள்  என்றும்  மாவட்ட  ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.
 
- சி. ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்