நித்யானந்தா இப்போதுதான் கொஞ்சகாலமாக எந்த வித பஞ்சாயத்தும் இல்லாமல் தன்னுடைய சிஷ்யர்களுக்கு மேஜிக் ஷோ நடத்திக்காட்டிக்கொண்டு சந்தோஷமாக பொழுதைக் கழித்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் மீது சோஷியல் மீடியாவில் பிரபலமான சிஷ்யர் ஒருவர் மீ டூ புகார் கொடுத்துள்ளார்.
வைரமுத்து ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிரான் வீடியோவில் பாரதி பாடல் பாடிவிட்டு அனைவரும் காதை மூடிக்கொள்ளும் விதமாக கெட்ட வார்த்தை அர்ச்சனை செய்த நித்யானந்தா சிஷ்யர் ஒருவரை யாரும் மறந்திருக்கமுடியாது. ஆம், அதே சிஷ்யர்தான் இப்போது நித்யானந்தா மீது மீ டூ புகார் சொல்லி பீதியைக் கிளப்பியுள்ளார்.
இது சம்மந்தமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் பழைய வீடியோ போலவே பாரதி பாட்டை பாடி ஆரம்பித்துவிட்டு ‘மக்களுக்கு ஒரு உண்மையைத் தெரியப்படுத்தவே இந்த கானொளியைப் பதிவிடுகிறேன். நித்யானந்தா சாமியால 2014-ல மே மாசம் எல்லார் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன். அதுமட்டுமில்லாம என் நெத்தியில கைவச்சு எனர்ஜி தர்ஷங்கிற பேருல என்னக் கதறக் கதறக் கொடூரமா ஆக்கிறமிச்சாரு பரம்ஹம்ச நித்யானந்தர் 2015-ல. ஆனா எனக்கு தேதி ஞாபகம் இல்ல. ஆனா நான் சொல்றது எல்லாம் உண்ம. இத ஏன் நா இப்ப சொல்றேன்னா இப்பதான் எனக்கு தைரியம் வந்திருக்கு. மக்களுக்கும் இதப்பத்தின விழிப்புணர்வுலாம் வந்திருக்கு. என்னப்போல பல ஆண்களும் பெண்களும் இந்த பரமஹம்ச் நித்யானந்தரால பெரிய அளவுல கபளீகரம் செய்யப்பட்டுள்ளனர். மீ டூ மூலமா உங்க எல்லார்கிட்டயும் இத நான் தெரியப் படுத்திக்கிறன்.. நித்யானந்தம்.’ எனக் கூறியுள்ளார்.
நித்யானந்தாவின் சிஷ்யரே அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள இந்த கானொளி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.