காஞ்சிபுரத்தில் மாடியில் இருந்து குதித்த மாணவன்! – குவிந்த போலீஸ் பாதுகாப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (09:14 IST)
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து ஆங்காங்கே மாணவர்கள் சிலர் தற்கொலைக்கு முயலும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோப்புப்படம்

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் பள்ளியை சூறையாடியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று சேலத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை நலம் விசாரித்த சேலம் ஆட்சியர், அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல நேற்று காஞ்சிபுரத்திலும் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்க பள்ளிக்கு பலத்த காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்