பள்ளி மாணவியின் உடல் இன்று மறுபிரேத பரிசோதனை: மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு!

செவ்வாய், 19 ஜூலை 2022 (09:00 IST)
கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து இது குறித்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது
 
இந்த வழக்கு விசாரணையின்போது மாணவியின் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது 
 
இதனையடுத்து கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.யை
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்