காலை பள்ளியில் ப்ரேயர் நடந்த நிலையில் அங்கு செல்லாமல் வகுப்பறையிலேயே அமர்ந்திருந்த மாணவி திடீரென தனது வகுப்பறை இருந்த மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமி மாடியிலிருந்து விழுந்ததை கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவியை சந்தித்து நலம் விசாரித்த சேலம் கலெக்டர், மாணவி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாகவும், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.