யூரியாவுக்கான மானியம் 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு- பிரதமருக்கு நன்றி கூறிய அண்ணாமலை

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (20:21 IST)
யூரியாவுக்கு வழங்கப்படும் மானியத்தை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டித்து, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் தோள்களிலிருந்து பெரும் சுமையை இறக்கி வைத்ததற்காக,  பிரதமர்  நரேந்திரமோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

யூரியாவுக்கு வழங்கப்படும் மானியத்தை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டித்து, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் தோள்களிலிருந்து பெரும் சுமையை இறக்கி வைத்ததற்காக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு   நரேந்திரமோடி  
அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
2024-25 நிதியாண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கு,  ரூபாய் ₹3,68,677 கோடியை, யூரியா மானியமாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சந்தை விலை ₹2200 என்ற அளவில் இருக்கும்போது, 45 கிலோ யூரியா மூட்டையை, ₹242க்கு வழங்கும் மத்திய அரசுக்கு, தமிழக விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
மத்திய அரசின் PMPRANAM திட்டம், மாநிலங்கள், மாற்று உரங்கள் மற்றும் ரசாயன உரங்களைச் சீராகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் திட்டமாகும். நமது மாண்புமிகு பிரதமர் திரு  மோடி  அவர்கள் இயற்கை உரங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க, ₹1451 கோடியில் சந்தை மேம்பாட்டு உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார். மேலும், நிலத்தில் உள்ள கந்தகப் பற்றாக்குறையை நிகர் செய்ய,  கந்தகம் கலந்த யூரியா விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் நமது பாரதப் பிரதமர் அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் சார்பிலும்,  தமிழக பாஜக  சார்பிலும், மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் '' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்