காங்கிரஸ் கட்சிக்கு போன் பே நிறுவனம் எச்சரிக்கை.. என்ன காரணம்?

வியாழன், 29 ஜூன் 2023 (16:06 IST)
காங்கிரஸ் கட்சி தங்களது லோகோவை பயன்படுத்தி போஸ்டர் அடித்துள்ளதாக போன் பே நிறுவனம் அக்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறது. 
 
அதில் காங்கிரஸ் கட்சியின் போஸ்டரில் போன் பே நிறுவனத்தின் லோகோவை பதிவு செய்து இங்கே ஐம்பது சதவீதம் கமிஷன் செலுத்தி உங்களது வேலையை முடித்துக் கொள்ளலாம் என்று எழுதப்பட்டுள்ளது 
 
இதற்கு போன் பே நிறுவனம் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது: ’எந்த ஓர் அரசியல் கட்சியோ அல்லது அரசியல் சாராத மூன்றாவது நபர்களோ யாரும் எங்களது லோகோவை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. 
 
போன் பே லோகோ எங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையாகும். ‘போன் பே’-யின் அறிவுசார் சொத்து உரிமைகளை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 
 
எங்கள் நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் லோகோவுடன் இருக்கும் போஸ்டர்களை நீக்கும்படி மத்தியப் பிரதேச காங்கிரஸை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்"
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்