ஜிலேபி, பக்கோடா போன்ற உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் உட்பட சில நோய்கள் ஏற்படும் என்று எச்சரிக்கை பலகை ஒவ்வொரு இனிப்புக் கடையிலும் வைக்கப்படும் என மத்திய அரசு முன்னர் கூறியதாக பரவிய தகவலுக்கு, தற்போது எச்சரிக்கை பலகைகள் இல்லை, விழிப்புணர்வு பதாகைகள் மட்டுமே வைக்கப்படும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த வகையில், அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வடிவமைக்கப்படும் என்றும், அதற்காக ஜிலேபி, பக்கோடா போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும், தடை விதிப்பதோ அல்லது எச்சரிக்கை விடுப்பதோ தங்கள் எண்ணம் இல்லை என்றும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற உணவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகள் மட்டுமே வைக்கப்படும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் சுகாதார அபாயங்களை மக்கள் புரிந்துகொள்ள மட்டுமே இந்த பதாகைகள் வைக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.