அரிய வகை ரத்தம் கொண்ட சிறுமியை ரத்த சோகையில் இருந்து மீட்ட மருத்துவர்கள்

வியாழன், 29 ஜூன் 2023 (16:28 IST)
திருவண்ணாமலை மாவட்டம் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 3 வயது சிறுமி. அரியவகை ரத்தப்பிரிவு கொண்ட இந்த  சிறுமி ரத்த சோகை  நோயால் பாதிக்கப்பட்டார். எனவே 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கல்லூரியில் சேர்த்தனர்.

அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் உடலில் ரத்தம் குறைவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அரியவகை ரத்தப்பிரிவான பாம்பே வகை ரத்தம் என்று தெரியவந்தது.

இந்த அரியவகை ரத்தமான பாம்பே வகை பெங்களூரில் இருப்பதை தெரிந்து கொண்டு பெங்களூரில் உள்ள ரத்த வங்கியை தொடர்பு கொண்டு திருவண்ணாமலைக்கு கடந்த 26 ஆம் தேதி ரயில் மூலம் ரத்தம் கொண்டு வர செய்தனர்.

அதன்பின்னர், சிறுமியின் உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் உடல் நிலை சீரானது. தற்போது அவருக்கு ரத்த சோகைக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்