வாரிசு அரசியல் இல்லாத ஒரே கட்சி பாஜக தான்: ஜே.பி.நட்டா பேச்சு

வியாழன், 29 ஜூன் 2023 (17:52 IST)
வாரிசு அரசியல் இல்லாத ஒரே கட்சி பாஜக தான் என கட்சியின் தேசிய செயலாளர் ஜேபி நட்டா தெரிவித்தார்.
 
ராஜஸ்தானில் நடந்த போது கூட்டத்தில் பேசிய ஜேபி நட்டா ஒன்பது ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளை பாராட்டி பேசினார். இந்தியா ஊழல் நாடாக அறியப்பட்ட நிலையில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்றும் உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக திகழ்வதாகவும் கூறினார் 
 
அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகளாக மாறிவிட்ட நிலையில் வாரிசு அரசியல் இல்லாத ஒரே கட்சி பாஜக தான் என்று ஜே பி நட்டா தெரிவித்தார் 
 
ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்றும் கண்டிப்பாக ராஜஸ்தானில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்