மத்திய அமைச்சருக்கு நேரடி குட்டு: பிண்ணி பெடலெடுக்கும் உதயநிதி!

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (11:40 IST)
30% பாடங்கள் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்ததை நியாப்படுத்திய அமைச்சருக்கு குட்டு வைத்துள்ளார் உதயநிதி. 
 
கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால், 30% பாடங்கள் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. இதனடிப்படையில் மதச்சார்பின்மை, குடியுரிமை, கூட்டாட்சி போன்ற பல பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. 
 
எனவே இது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம் அளித்தார். அப்போது அவர், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம். வேறு உள்நோக்கமில்லை. நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  
 
மேலும் கல்வியில் அரசியல் செய்வதை விட்டு விட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம் எனவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசினார். இந்நிலையில் இதனை விமர்சித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் அதிவிட்டுள்ளார். 
 
அவர் பதிவிட்டுள்ளதாவது, கல்வியில் அரசியல் வேண்டாம் அரசியலில் கல்வி கற்போம் என உருட்டும் அமைச்சருக்குக்  கூட்டாட்சியும், மதச்சார்பின்மையும்தான் அரசியல் என்பது தெரியாதோ? போலிகளுக்கு எல்லா நேரமும்  கட்டை விரல்கள் கிடைத்திடாது. சமயத்தில் கலைஞர் சொன்னது போல் பட்டை தான் உரியும்.
 
அப்போது அறவே படிக்காதே என்றவர்கள் இப்போது 11 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்தில் இதை இதைப் படிக்காதே என்கிறார்கள். மாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது. குடியுரிமை, கூட்டாட்சி, மதச்சார்பின்மையோடு, வாய்க்கு வாய் பேசும் தேசியவாதமும் கூடாதாம் என நேரடி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்