சிபிஎஸ்இ பாடதிட்ட நீக்கத்தில் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் விளக்கம்!

வியாழன், 9 ஜூலை 2020 (13:39 IST)
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம். 
 
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த கல்வி ஆண்டு மிகவும் குறுகிய காலமாக இருக்கும் என்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 30 சதவீதம் குறைப்பு என மத்திய அரசு முடிவு செய்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
சிபிஎஸ்இ தனது பாடத்திட்ட பகுத்தறிவுப் பயிற்சியில் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, தேசியவாதம், மதச்சார்பின்மை, இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் மற்றும் இந்தியாவில் உள்ளூராட்சி மன்றங்களின் வளர்ச்சி போன்ற அத்தியாயங்களை புதுப்பித்த பாடத்திட்டத்தின்படி கைவிட்டுள்ளது.
 
இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. எனவே இது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம் அளித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம். வேறு உள்நோக்கமில்லை. நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் கல்வியில் அரசியல் செய்வதை விட்டு விட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்