உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமின்றி வட இந்தியாவையே கலக்கி வந்த ரவுடி விகாஷ் துபே இன்று காலை போலீஸாரால் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த என்கவுன்டரை தலைமையேற்று நடத்தியது தமிழகத்தை சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் சேலம் பகுதியை சேர்ந்தவர் எஸ்பி தினேஷ்குமார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஐபிஎஸ் முடித்து காவல் துறையில் பணியில் சேர்ந்த நிலையில் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எஸ்பியாக மாற்றப்பட்டார். இந்த நிலையில் இவ்வழக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதாக தெரிகிறது
இதனையடுத்து விகாஸை கைது செய்யவோ அல்லது என்கவுண்டர் சுட்டுக்கொல்லவோ தினேஷ்குமார் முடிவு செய்ததாகவும் இதனை அடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் பிடிபட்ட விகாஸை உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அழைத்து வந்தபோது தப்பிக்க முயன்ற விகாஸை என்கவுண்டர் செய்ய தினேஷ்குமார் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது
இதனையடுத்து காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். எனவே விகாஸ்துபே என்கவுண்டருக்கு என்கவுண்டர் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதனை அடுத்து மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் ரவுடித்தனம் செய்த விகாஸின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சிறு திருட்டில் ஆரம்பித்து கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து என பல குற்றங்களைச் செய்த விகாஸ் மிது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் உள்ளது என்பதும் இதில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் கொலை வழக்குகள் என்பதும் குறிப்பிடத்தக்கவை
ஏற்கனவே விகாஸ் துபேவின் கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் தற்போது விகாஸும் என்கவுண்டர் செய்யப்பட்டதால் அந்த கொலைகார கூட்டமே முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது