நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் 3000 பேர் இன்று திமுகவில் இணைந்த நிலையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்க வேண்டிய நிலை இருக்கிறது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3000 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் இதுகுறித்து சீமான் கூறிய போது கட்சியில் சேர்ந்த பிறகு தான் எத்தனை பேர் சேர்ந்து இருக்கிறார்கள் என்று எண்ணிக்கை தெரியும், ஆனால் கட்சியில் சேர்வதற்கு முன்பே 3,000 பேர் கூறுவது எப்படி என்று புரியவில்லை என்று தெரிவித்தார்.
ஆயினும் திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள், மகிழ்ச்சி என்றும் திமுகவையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்க வேண்டிய நிலை இருக்கிறது என்றும் கூறினார்.
பெரியாரை எதிர்த்து தான் அறிஞர் அண்ணா விலகி வந்து திமுகவை தொடங்கினார் என்றும் ஆனால் தற்போது திமுக பெரியாருக்கு ஆதரவளித்து வருகிறது என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் ஏ டீம் ஆக திமுக இருப்பதால்தான் நான் பி டீம் ஆகிவிட்டேன் என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.