வாரத்தின் கடைசி தினத்தில் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva

வெள்ளி, 24 ஜனவரி 2025 (12:14 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம். மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், தற்போது நல்ல ஏற்றத்தில் உள்ளது. சென்செக்ஸ் 323 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 845 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது.

அதை போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 92 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 296 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக மிக அதிகமாக பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது படிப்படியாக உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய பங்குச்சந்தையில், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ், பாரதி ஏர்டெல், விப்ரோ, டைட்டான், டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, பிரிட்டானியா, ஸ்டேட் வங்கி, கோடக் வங்கி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், சன் பார்மா, மாருதி, இண்டஸ் இண்ட் வங்கி, சிப்லா, அப்போலோ ஹாஸ்பிடல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருகின்றன.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்