ரயில் டிக்கெட் உடனே புக் செய்யலாம்.. பணம் பின்னர் செலுத்தலாம்..! - IRCTC அறிமுகப்படுத்திய Ticket Now Pay Later வசதி!

Prasanth Karthick

வெள்ளி, 24 ஜனவரி 2025 (12:32 IST)

ரயில் டிக்கெட் புக் செய்வதில் Ticket Now Pay Later என்ற வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

 

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பல ஆயிரம் ரயில் சேவைகள் இயங்கி வரும் நிலையில் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு IRCTC இணையதளத்தில் மக்கள் புக்கிங் செய்கின்றனர். ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வசதி, யுபிஐ வசதி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இந்நிலையில் தற்போது முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் உள்ளது போல தாமதமாக பணம் செலுத்தும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.

 

இந்த Ticket Now Pay Later வசதி மூலம் டிக்கெட் புக்கிங் செய்தால் Convenience Fee-ல் தளர்வு வழங்கப்படுகிறது. இந்த வசதியை பெற முதலில் www.epaylater.in என்ற தளத்தில் லாக் இன் செய்து கணக்கு தொடங்கிக் கொள்ள வேண்டும். பின்னர் டிக்கெட் புக்கிங் செய்யும்போது அதில் பணம் செலுத்த உள்ள ஆப்ஷன்களில் Pay Later வசதியை தேர்வு செய்தால் டிக்கெட் உடனடியாக புக்கிங் ஆகிவிடும். அதற்கான பணத்தை டிக்கெட் புக்கிங் செய்த 14 நாட்களுக்குள் செலுத்தினால் தாமத கட்டணம் கிடையாது. 14 நாட்களுக்கு மேல் ஆனால் 3.5 சதவீதம் தாமத கட்டணம் வசூலிக்கப்படும்.

 

வழக்கமாக டிக்கெட் புக்கிங் செய்யும் முறையில் கிரெடிட் கார்டு, யுபிஐ தகவல்களை உள்ளிட்டு புக்கிங் செய்வதில் உள்ள தாமதம் இந்த Pay Later  முறை மூலமாக குறைவதுடன், உடனடியாக டிக்கெட்டை புக் செய்ய முடியும் என்பதால் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்