தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஜெயசீலன். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டதும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அவரது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் திரை உலகின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.