இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும்: உதயநிதி

Mahendran

வெள்ளி, 24 ஜனவரி 2025 (12:27 IST)
3000 நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும் என கூறினார். அவர் மேலும் பேசியதாவது:
 
தேர்தல் காலங்களில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணியில்தான் அனைவரும் ஒன்று சேர்வார்கள். ஆனால், இன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள், ஆளுங்கட்சியில் உங்களை இணைத்துள்ளீர்கள் என்றால் 2026 தேர்தல் முடிவுகள் உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய ஒன்றுதான்
 
இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காகவே மீண்டும் உங்களுக்கு பாராட்டும், வாழ்த்தும்.
 
"நீங்கள் கழகத்தின் கொள்கையை ஏற்று இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றீர்கள். திமுக இன்று 75வது ஆண்டில் பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்து விட்டீர்கள், ஆனால் உங்களைப்போல ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு சில தயக்கத்தோடு அங்கு இருப்பார்கள்.
 
அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அத்தனை பேரையும் கழகத்தில் இணைக்க வேண்டிய முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்
 
இவ்வாறு நாதகவினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்