நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்க வேண்டும் என பாஜக அதிமுகவை நெருக்குகிறதாம்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் அமோக வெற்றி பெற்ற பாஜக, தமிழகத்தில் மண்ணை கவ்வியது. இந்த தோல்விக்கு அதிமுகவே காரணம் என்பதுதான் பாஜக தலைமையின் எண்ணமாக உள்ளது.
சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு காட்டிய முக்கியத்துவத்தை மக்களவை தேர்தலில் அதிமுக காட்டவில்லை என்பதால் அதிமுக மீது கடும் அதிருப்தியில் பாஜக தலைமை உள்ளது.
எனவே, பாஜக எம்பி தேர்தலில்தான் கோட்டை விட்டுவிட்டோம், இந்த தேர்தலிலாவது ஜெயித்து காட்டலாம் என நாங்குநேரியில் பாஜக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என அதிமுகவை நெருக்குகிறதாம்.
அப்படி போட்டியிட்டு ஜெயித்துவிட்டால் பாஜக சார்பில் ஒரு எம்எல்ஏ சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என கணக்கு போட்டுள்ளதாம் பாஜக தரப்பு. ஆனால், இது குறித்து எதையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் பதிலும் செல்லாமல் அமைதி காக்கிறதாம் அதிமுக தரப்பு.