இதற்காக திமுக தனது மாவட்ட செயலாளர்கள் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேள்வி எழுப்பியபோது ’திமுகவுக்கு நாங்கள் 100 சதவீதம் ஒத்துழைப்பு அளிப்போம். 100 சதவீதத்துக்கு மேல் 1 சதவீதம் இருந்தால் அதற்கும் ஒத்துழைப்பு அளிப்போம். அதிமுக ஆட்சி கவிழ்வது தவிர்க்க முடியாதது. அது இப்போது நூலிழையில் ஒட்டிக்கொண்டுள்ளது. அறுந்துவிழ நாளாகாது’ எனத் தெரிவித்துள்ளார்.