கோவை மேயர் போட்ட முதல் கையெழுத்து: பொதுமக்கள் பாராட்டு!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (13:20 IST)
கோவை மேயர் போட்ட முதல் கையெழுத்து: பொதுமக்கள் பாராட்டு!
கோவை மேயராக பதவியேற்றவுடன் கல்பனா குமார் போட்ட முதல் கையெழுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவு சமீபத்தில் வெளியானது என்பதும் இதில் 21 மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றனர் என்பதும் அறிந்ததே
 
இந்நிலையில் நேற்றிரவு வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்ற நிலையில் இன்று மேயர் நகர்மன்ற தலைவர் பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்வு நடைபெற்றது. இதில் கோவை கல்பனா ஆனந்த் குமார் வெற்றி பெற்று பொறுப்பேற்றார்
 
கோவை மாநகர மேயராக பதவி ஏற்ற கல்பனா ஆனந்த் குமார் போட்ட முதல் கையெழுத்தில் கழிப்பறைகள் இல்லாத மாநகராட்சி பள்ளிகளில் உடனடியாக கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவருடைய இந்த முதல் கையெழுத்து பெறும் வரவேற்பை பெற்று வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்