120 கிமீ வடக்கு திசையில் மிக்ஜாம் புயல் ..மழை குறையுமா? வானிலை மையம் தகவல்

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (21:26 IST)
சென்னையில் இருந்து 120 கிமீ  வடக்கு திசையில் மிக்ஜாம் புயல்  விலகிச் சென்றதாகவும் இன்று நள்ளிரவுக்குப் பின் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் வெள்ளக்காடான சென்னை மக்களுக்கு உதவுவதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக பகுதிவாரியாக அமைச்சர்களை  நியமித்து  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில் மேலும் 7 அமைச்சர்களை முதல்வர்  நியமித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை தாம்பரம், ஆவடி, ஆகிய மா நகராட்சிகளுக்கு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கு என கூடுதலால ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னையில் மொத்தம் 380 இடங்களில் தண்ணீர் சூழ்ந்திருந்த நிலையில், தண்ணீரை அகற்ற 990 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், கீழே விழுந்த 24 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை  மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்