மின் விநியோகம் நிறுத்தம் ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

திங்கள், 4 டிசம்பர் 2023 (19:29 IST)
சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் வெள்ளக் காடாகியுள்ளதால் மக்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தன்னார்வ  நிறுவனங்கள் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றன.

இந்த நிலையில், மிக்ஜாம் தீவிர புயல் சென்னையில் இருந்து மெதுவாக வட திசையில் நரகத் தொடங்கியுள்ளதாகவும்,  கடந்த 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக மழை பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இரவு 12 மணிக்கு மேல் மழை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், சென்னையில் பெய்து வரும் அதிக கனமழையால் பாதுகாப்பு கருதியே மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மழை நின்றவுடன் 2 மணி நேரத்திற்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் எனவும், மின்சார வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் இயங்கும் எனவும், சென்னையில் மின்பாதிப்புகளை சரிசெய்ய மற்ற மாவட்டங்களில் இருந்து மின்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல்  மீட்பு  நடவடிக்கையாக   மழைப்பாதிப்பு நிவாரண பணிகளுக்கு பகுதிவாரியாக அமைச்சர்களை தமிழக அரசு  நியமித்துள்ளது.  குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்