சென்னை மக்கள் மழை பற்றிய புகார்களுக்கு அழைக்கலாம்-வாட்ஸ் ஆப் எண் அறிவித்த முதல்வர்

வியாழன், 30 நவம்பர் 2023 (18:01 IST)
வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றி உள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று டிசம்பர் மூன்றாம் தேதி புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில்  14 மாவட்ட கலெக்டர்களுக்கு இந்த அவசர கடிதம் எழுதப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,   மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் எண்கள் மற்றும் தொலைபேசி எண்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

''கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது;
 
தொடர் மழை காரணமாகத் தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது;
 
விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்;
 
மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் 1913, 04425619204, 04425619206, 04425619207 ஆகிய எண்களிலும்,  9445477205 எண் மூலம் வாட்ஸ்ஆப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்