நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதிலிருந்து முழுமையாக ஒரு நாள் கூட பிரச்சனை இல்லாமல் நடைபெறவில்லை என்ற நிலையில், நேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரு அவைகளும் கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், இதனை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
உடனடியாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வழியாக உள்ளன.