ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் நேற்று இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இந்த வார இறுதியில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 12 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் இதனை கூட்டுக்குழு விசாரணைக்கு சபாநாயகர் அனுப்பி வைப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ஒரே நாடு ஒரே மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற தகவல் காரணமாக பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாமல் மக்கள் அவையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் அனைத்து எதிர்கட்சி எம்பிக்களும் இன்று தவறாமல் மக்களவையில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.