நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங் உட்கார்ந்திருந்த இடத்தில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தன்னிடம் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று பகல் 12:57 மணிக்கு மாநிலங்களவைக்குள் நுழைந்தேன். 1 மணிக்கு எழுந்து விட்டேன்,. பிறகு 1:30 மணிக்கு நான் நாடாளுமன்ற உணவகத்தில் தான் அமர்ந்திருந்தேன். அதன் பிறகு நாடாளுமன்றத்தில் இருந்து வீடு திரும்பி விட்டேன்" என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக நேற்றைய நாடாளுமன்றம் கலைந்தவுடன், வழக்கமான சோதனைகள் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் கட்டு கட்டாக பணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், உடனே இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும் மாநிலங்களவை தலைவர் கூறியுள்ளார்.