பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

Siva

வியாழன், 24 ஏப்ரல் 2025 (07:23 IST)
பெஹல்காம் தாக்குதலில் தொடர்பு உள்ள அனைவருக்கும் தக்க பதிலடி அளிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்  டெல்லியில் நேற்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பயங்கரவாதிகள் நடத்திய இந்த கோழைத்தனமான தாக்குதலால் பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளது என்று கூறிய அமைச்சர் ராஜ்நாத்சிங் , இந்த மிருகத்தனமான செயல் மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும் பெஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுத்த பதில் அடி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 28 பேர் கொல்லப்பட்டன. அதுவும் இந்த தாக்குதலில் இந்துக்கள் மட்டுமே குறிவைத்து கொல்லப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் பெஹல்காம் தாக்குதல் குறித்த ஆலோசனை செய்ய இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்