எதிர்க்கட்சி எம்பிகளின் கடும் எதிர்ப்பை மீறி, மக்களவையில் இன்று ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை மக்களவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் படித்துக் கொண்டிருந்தபோது, மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பை மீறி, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து, இந்த மசோதாவை சபாநாயகர் உயர்மட்ட குழுவுக்கு அனுப்புவார் என்றும், உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜி ஆகியோர் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை எதிர்த்து ஏற்கனவே குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.